/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறாரை நல்வழிப்படுத்த 'பாதை' திட்டம் துவக்கம்
/
சிறாரை நல்வழிப்படுத்த 'பாதை' திட்டம் துவக்கம்
ADDED : டிச 12, 2024 12:37 AM
சென்னை,
புரசைவாக்கத்தில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்ல சிறார்களுக்கு, சிறந்த எதிர்காலத்தை அமைக்கும் வகையிலான, 'பாதை' திட்டத்தை, அமைச்சர் கீதாஜீவன் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
முதல்வரின் அறிவுரைப்படி, தனியார் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 'பாதை' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் வாயிலாக, சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறார் இல்லம் வருவோருக்கு, உளவியல் ஆலோசனை வழங்குவது, நடத்தை மாற்றம், மது மற்றும் போதை பழக்கத்திற்கான சிகிச்சை அளித்தல்; தனித்திறன்களை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.
சிறார் விரும்பும் பயிற்சிகள் அளிக்கப்படும். வழக்கு முடிந்து வீடு திரும்பினாலும், அவர்கள்தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். அவர்களின்வளர்ச்சிக்கான உதவிகள் செய்யப்படும். இந்த திட்டம் மற்ற சிறார் இல்லங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, நிதி உதவி வழங்கும் வகையில், துறையை முறைப்படுத்தி உள்ளோம். அந்த வகையில், 4,621 குழந்தைகளுக்கு, 70 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

