/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துாரில் 1,200 பேருக்கு பட்டா வழங்கல்
/
அம்பத்துாரில் 1,200 பேருக்கு பட்டா வழங்கல்
ADDED : ஜூலை 26, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார் அம்பத்துார் தொகுதிக்குட்பட்ட, 1,200 பேருக்கு, அமைச்சர்கள் ராமசந்திரன், முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர், வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.
அம்பத்துார் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், 6,000 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக, 1,200 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி, அம்பத்துாரில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர்கள் ராமசந்திரன், முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. அவரால் வரமுடியவில்லை.