/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையில் தடுப்பு கற்கள் அமைப்பு
/
நடைபாதையில் தடுப்பு கற்கள் அமைப்பு
ADDED : பிப் 16, 2026 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எழும்பூரில் பிரதான சாலைகளில் உள்ள நடைபாதைகளில், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் விதமாக, தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ராயபுரம் மண்டலம், எழும்பூரில், பாந்தியன் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை, காவலர் சாலைகள் உள்ளன. இவற்றை ஒட்டி அரசு மருத்துவ மனைகள், அரசு அலுவலகங் கள், வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இவற்றுக்கு வாகன நிறுத்தும் வசதி இல்லாததால், இங்குள்ள நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், நடக்க இடமின்றி பாதசாரிகள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் விதமாக, நடைபாதையில் தடுப்பு கற்களை அமைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

