ADDED : மே 29, 2026 02:06 AM

அ நிறம் | அளவு
ராயப்பேட்டை: நடைபாதையில் வாகன ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட தடுப்பு கற்கள் இரண்டு நாட்களிலேயே உடைக்கப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டை் பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை நடைபாதையை, சிலர் வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வந்தனர்.
வேறுவழியின்றி, பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி வந்தனர். இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில், மூன்று நாட்களுக்கு முன் தடுப்பு கற்களை முன் அமைத்தனர்.
இந்நிலையில் இரண்டே நாட்களில் அவை உடைக்கப்பட்டுள்ளன. இந்த அத்துமீறலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
