/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை அமைக்கும் பணி போக்குவரத்து மாற்றம்
/
நடைபாதை அமைக்கும் பணி போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 06, 2024 12:28 AM

சென்னை,வண்ணாரப்பேட்டை, எம்.சி.சாலையில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி நாளை துவங்க உள்ளதை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
l ஸ்டான்லி சுரங்கப்பாதையிலிருந்து, எம்.சி., சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாகச் செல்லலாம்.
l கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் ஜி.ஏ., சாலையிலிருந்து, எம்.சி., சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் மன்னார்சாமி கோவில் சாலை வழியாக செல்லலாம்.
போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை வழங்கும்படி, காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.