/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மோதி விபத்து நடந்து சென்றவர் காயம்
/
லாரி மோதி விபத்து நடந்து சென்றவர் காயம்
ADDED : மே 16, 2025 12:42 AM
மாதவரம், மூலக்கடை பிரதான சாலையில், நேற்று முன்தினம் இரவு, 'ஈச்சர்' லாரி ஒன்று, வியாசர்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது.
லாரியை, மூலக்கடையை சேர்ந்த விஜய், 39, என்பவர் ஓட்டினார். மூலக்கடை அருகே வந்தபோது, ஓட்டுநர் விஜய்க்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அணுகு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அந்த சரக்கு வாகனம், அவ்வழியாக நடந்து சென்ற மூலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 33, என்பவர் மீது மோதி நின்றது.
இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.