/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடைந்த மேம்பால படிக்கட்டு சீரமைக்க பாதசாரிகள் கோரிக்கை
/
உடைந்த மேம்பால படிக்கட்டு சீரமைக்க பாதசாரிகள் கோரிக்கை
உடைந்த மேம்பால படிக்கட்டு சீரமைக்க பாதசாரிகள் கோரிக்கை
உடைந்த மேம்பால படிக்கட்டு சீரமைக்க பாதசாரிகள் கோரிக்கை
ADDED : நவ 15, 2024 01:30 AM
திருவொற்றியூர், எர்ணாவூரில், உடைந்த மேம்பால படிக்கட்டுகளை சீரமைக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் மேம்பாலம், 700 மீட்டர் நீளம் கொண்டது.
கிழக்கே, எண்ணுார் விரைவு சாலை, சுனாமி குடியிருப்பு, பாரதியார் நகர், பாரத் நகர் ஆகிய பகுதிகளையும், மேற்கே மணலி விரைவு சாலை, எர்ணாவூர், முருகப்பா நகர், முல்லை நகர் போன்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தை கடக்கும் வகையில், பக்க வாட்டில் இருபுறமும் படிக்கட்டுகள் உள்ளன. மேம்பாலம் பழமை காரணமாகவும், முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாகவும் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் மண்டியுள்ளது.
மேலும், பாதசாரிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளிலும் செடி, கொடிகள் வளர்ந்தும், உடைந்தும் காணப்படுவதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக, பாதசாரிகள் வெகு துாரம் சுற்றி, மேம்பாலம் இறக்கம் சென்று கடக்க வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உடைந்து காணப்படும் மேம்பால படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.