/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமடைந்த நடைபாதை தடுக்கி விழும் பாதசாரிகள்
/
சேதமடைந்த நடைபாதை தடுக்கி விழும் பாதசாரிகள்
ADDED : நவ 02, 2024 12:25 AM

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், நடப்பதற்கே தகுதியில்லாத வகையில் நடைபாதைகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன.
குறிப்பாக, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தின் எதிர்புறத்தில் உள்ள நடைபாதையில், கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால், பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இதன் காரணமாக, சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர்.
அதே சாலையில் சில இடங்களில், ஆக்கிரமிப்பு கடைகள் நிரந்தரமாக நடைபாதையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடைந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.