/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடையூறாக நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்
/
இடையூறாக நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்
ADDED : பிப் 04, 2024 05:32 AM
சென்னை: கல்லுாரி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த, 6 கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில் பிரபல தனியார் கல்லுாரி உள்ளது. இங்கு நேற்று பெற்றோர்கள் சந்திப்பு நடந்தது. இதற்காக மாணவியரின் பெற்றோர் நுாற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கூடினர்.
இதனால் வாகன நிறுத்துவதற்கென கல்லுாரி வளாகத்திற்குள் போதிய இடம் இல்லாததால், கல்லுாரி சாலையில் ஆக்கிரமித்து தங்களது கார்களை நிறுத்தினர்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றனர்.
சம்பவம் அறிந்துவந்த நுங்கம்பாக்கம் போலீசார் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த, 6 கார்களுக்கு தலா, 600 ரூபாய் அபராதம் விதித்தனர்.
பின் கார்கள் அங்கு இருந்து அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சீரான போக்குவரத்தை போலீசார் உறுதி செய்தனர்.