/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வூதிய திட்டம் கருத்து கேட்பு கூட்டம்
/
ஓய்வூதிய திட்டம் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : செப் 09, 2025 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய அரசு உத்தரவின்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, பல்வேறு கட்டங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
ஐந்தாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கடைசி கட்ட கருத்து கேட்பு கூட்டம் தலைமை செயலகத்தில் வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது.