sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர், கழிவுநீர் பிரச்னையால் மக்கள் தவிப்பு.. விடுதிகளாக மாறும் வீடுகள்! சுய சுகாதார சான்றால் விதிமீறல் அதிகரிப்பு

/

குடிநீர், கழிவுநீர் பிரச்னையால் மக்கள் தவிப்பு.. விடுதிகளாக மாறும் வீடுகள்! சுய சுகாதார சான்றால் விதிமீறல் அதிகரிப்பு

குடிநீர், கழிவுநீர் பிரச்னையால் மக்கள் தவிப்பு.. விடுதிகளாக மாறும் வீடுகள்! சுய சுகாதார சான்றால் விதிமீறல் அதிகரிப்பு

குடிநீர், கழிவுநீர் பிரச்னையால் மக்கள் தவிப்பு.. விடுதிகளாக மாறும் வீடுகள்! சுய சுகாதார சான்றால் விதிமீறல் அதிகரிப்பு


UPDATED : ஜன 10, 2026 09:00 AM

ADDED : ஜன 10, 2026 05:07 AM

Google News

UPDATED : ஜன 10, 2026 09:00 AM ADDED : ஜன 10, 2026 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் கோவில், பள்ளி, மருத்துவமனை அருகில் உள்ள குடியிருப்புகள் விடுதிகளாக மாறுவதால், குடிநீர், கழிவுநீர், சுகாதார பிரச்னையால், வாடகைக்கு வருவோர் மிகவும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விடுதிகளுக்கு, தாங்களாகவே சுய சுகாதார சான்று பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால் சிக்கல் ஏற்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.

படிப்பு, வேலை, மருத்துவம், தொழில் நிமித்தமாக தினமும் ஆயிரக்கணக்கானோர், வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகின்றனர். இவர்களுக்காக, சென்னையில் 800க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன.

விடுதிகளை சுகாதாரமாக வைத்திருப்பதை உறுதி செய்ய, ஆண்டுதோறும், மாநகராட்சியில் இருந்து சுகாதார சான்று பெற வேண்டும். கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று, குடிநீர் பரிசோதனை சான்றுடன் விண்ணப்பித்தால், மாநகராட்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்வர்.

அப்போது, காற்றோட்ட வசதி, தங்கி இருப்போரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி, கழிவுநீர் வெளியேறும் வசதி, சமையல் அறை கட்டமைப்பு, வாகன நிறுத்தம் போன்றவை ஆய்வு செய்து, அவை சரியாக இருந்தால், சுகாதார சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிலையில், 'சுய சுகாதார சான்றிதழ்' வழங்கும் திட்டம், கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி விடுதி உரிமையாளர்கள், கட்டட உறுதி தன்மை, தீயணைப்பு துறை சான்றிதழ்களை தாங்களாகவே பதிவேற்றம் செய்து, இ - சேவை மையம் வழியாக சுய சுகாதார சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கட்டட உரிமையாளர்கள், அனைத்து வசதிகளும் இருப்பதாக 'தகுந்த' ஆவணங்களை தயார் செய்து, இ - சேவை வழியாக பதிவேற்றம் செய்து, சுய சுகாதாரச் சான்று பெற்றுக்கொள்கின்றனர்.

ஒரு வீட்டில் 20 பேர்


தவிர, விதிமீறி செயல்படும் விடுதிகள், ஏற்கனவே சுகாதார சான்று கேட்டு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விடுதிகள், தற்போது மிகவும் எளிமையாக சுய சுகாதார சான்றிதழ் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, விடுதிகளின் தேவை அதிகரித்துள்ளதால், பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பல கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்களை, ஆங்காங்கே வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளனர். ஐந்து பேர் தங்கிய ஒரு வீட்டில், 15, 20 பேரை தங்க வைக்கின்றனர்.

அதுவும், கோவில், பள்ளி, மருத்துவமனை அருகில் உள்ள வீடுகளை விடுதிகளாக மாற்றுவதால், குடிநீர், கழிவுநீர், சுகாதார பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

குறிப்பாக, குழாயில் அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் செல்ல வழியின்றி 'மேன்ஹோல்' மூடி வாயிலாக வெளியேறி சாலையில் ஓடி சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அருகாமை வீட்டு வாடகைதாரர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

கட்சிகள் ஆதரவு


வீடுகளை, விடுதிகளாக மாற்றும் சட்ட விரோத செயலுக்கு, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை ஏற்படுத்தாமல், அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுயசுகாதார சான்று பெற்ற விடுதிகளை ஆய்வு செய்ய உரிய அதிகாரம் வழங்கவில்லை. விதிமீறி சான்றிதழ் வாங்கி இருந்தால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்; சான்றிதழை ரத்து செய்வதா, அபராதம் விதிப்பதா, எச்சரிக்கை செய்வதா போன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், அதுபோன்ற விடுதிகளை ஆய்வு செய்ய முடியவில்லை.

மீறி ஆய்வுக்கு சென்றால், விடுதி உரிமையாளர்கள், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துதான் சான்றிதழ் வாங்கி உள்ளோம் எனக்கூறி, உள்ளேவிட மறுக்கின்றனர்.

ஒரே சான்று


அதையும் மீறி கட்டடத்திற்குள் சென்றால் கைகலப்பாகிறது. அவர்களுக்கு ஆதரவாக, சில கட்சி நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் செயல்படுகின்றனர்.

குடிநீர் பரிசோதனை செய்யாவிட்டால், விடுதியில் தங்கியிருப்போருக்கு வயிற்றுப்போக்கு, நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

விதிமீறி செயல்படும் பல விடுதிகளில், கட்டடம் உறுதி இல்லாமை, கொசு உற்பத்தி, டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டால், ஏன் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என, உயர் அதிகாரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.

சுய சுகாதார சான்றிதழ் வாங்கிய கட்டடங்களை ஆய்வு செய்ய, உரிய அதிகாரத்துடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் சுகாதாரம் சார்ந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூன்று விதமான சுகாதார சான்றிதழ்

சென்னை மாநகராட்சியில், சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர், மண்டல சுகாதார அதிகாரி ஆகியோரின் கையெழுத்துடன், கையால் எழுதிய சுகாதார சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில சுகாதார ஆய்வாளர்கள், முறைகேடில் ஈடுபட்டதால், மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பித்து, 'ஆன்லைன்' வழியாக சான்றிதழ் வழங்க வலியுறுத்தப்பட்டது. அதுபோன்று சிலர், விண்ணப்பித்து வாங்குகின்றனர். இப்போது, சுய சுகாதார சான்றிதழ், இ - சேவை வழியாக வழங்கப்படுகிறது. இதன்படி, மூன்று விதமான சான்றிதழ் வழங்குவது தற்போது நடைமுறையில் உள்ளது. முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளதால், ஒரே விதமான சான்றிதழ் வழங்கினால் இதுபோன்ற சிக்கல்கள் தீரும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us