/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வொண்டர்லா'வில் கோளாறு ராட்டினத்தில் மக்கள் தவிப்பு
/
'வொண்டர்லா'வில் கோளாறு ராட்டினத்தில் மக்கள் தவிப்பு
'வொண்டர்லா'வில் கோளாறு ராட்டினத்தில் மக்கள் தவிப்பு
'வொண்டர்லா'வில் கோளாறு ராட்டினத்தில் மக்கள் தவிப்பு
ADDED : டிச 04, 2025 02:04 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், தி ருப்போரூர் அடுத்த இள்ளலுாரில், 65 ஏக்கர் பரப்பளவில், 611 கோடி ரூபாய் மதிப்பில், 'வொண்டர்லா' பொழுதுபோக்கு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்டோர் டிக்கெட் வாங்கி, வொண்டர்லா மையத்திற்குள் வந்தனர்.
இந்நிலையில், மழை காரணமாக மின்தடை ஏற்பட்டு, சில ராட்டினங்கள் பாதியில் நின்றன.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள், வொண்டர்லா நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமரச பேச்சு நடத்திய நிர்வாகம், கட்டணம் இல்லாமல் மாற்று தேதிக்கு வரும்படி கூறியது.
முதல் நாளே பிரச்னையில் சிக்கியதால், வொண்டர்லா நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் கே.சிட்டிலப்பிள்ளி நேற்று, தன் சமூ க வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், 'வொண்டர்லா நிறுவனத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, சில நிமிடங்கள் விளையாட்டு உபகரணங்கள் இயங்கவில்லை.
அதனால் பொதுமக்களுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி அதுபோல் நடக்காது' என்றார்.

