/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறைவு சான்று பெறாமல் அபார்ட்மென்டில் குடியேற்றம் தண்ணீர் வசதி கிடைக்காமல் மக்கள் தவிப்பு
/
நிறைவு சான்று பெறாமல் அபார்ட்மென்டில் குடியேற்றம் தண்ணீர் வசதி கிடைக்காமல் மக்கள் தவிப்பு
நிறைவு சான்று பெறாமல் அபார்ட்மென்டில் குடியேற்றம் தண்ணீர் வசதி கிடைக்காமல் மக்கள் தவிப்பு
நிறைவு சான்று பெறாமல் அபார்ட்மென்டில் குடியேற்றம் தண்ணீர் வசதி கிடைக்காமல் மக்கள் தவிப்பு
ADDED : ஜூலை 09, 2025 01:02 AM
கோயம்பேடு, கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய 'பாஷியம்' நிறுவனம், பணி நிறைவு சான்று பெறாமல் வீடுகளை ஒப்படைத்ததால், அவற்றில் குடியேறிய மக்கள், சரியான தண்ணீர் வசதி கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 'பாஷியம் கன்ஸ்டிரக் ஷன்ஸ்' என்ற தனியார் கட்டுமான நிறுவனம், 15 பிளாக்குகளில், 2,078 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
'கிரவுன் ரெசிடென்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பில், ஐந்து பிளாக்குகளில் கட்டுமான பணி முடிந்து விட்டதாக கூறி, பயனாளிகளுக்கு அந்நிறுவனம் வீடுகளை ஒப்படைத்துள்ளது.
வீடு வாங்கிய பலரும், அவற்றில் குடியேறி உள்ளனர். நான்கு மாதங்களுக்கு மேலாகியும் முறையான மின் இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
டேங்கர் லாரிகளில் வரும் குடிநீர், ஜெனரேட்டர் வைத்து கட்டுமான நிறுவனம் தரும் மின்சார வசதியை பயன்படுத்த வேண்டி உள்ளது.
கட்டுமான திட்ட அனுமதி பெறுவதுபோல், பணி முடிந்ததும் சி.எம்.டி.ஏ.,விடம் முறையாக பணி நிறைவு சான்று பெற வேண்டும்.
அந்த சான்றை இணைத்துதான், வீடுகளுக்கான முறையான மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வசதிகள் கோரி விண்ணப்பிக்க முடியும்.
இந்நிறுவனம், கட்டுமான பணி முடிந்ததாக கூறி, வீடுகளை ஒப்படைத்தாலும், முறைப்படி பணி நிறைவு சான்று பெறாமல் உள்ளது.
இதனால், வீடுகளுக்கான முறையான மின் இணைப்பு, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, குடியிருப்போர் கூறுகையில், 'பணி நிறைவு சான்று வாங்காமல், கட்டுமான நிறுவனம் வீடுகளை ஒப்படைத்தது சரியான நடைமுறை அல்ல. தெரியாமல் குடியேறிவிட்டோம்.
'கோடிகளில் பணம் கொடுத்து வீடு வாங்கிய எங்களை இப்படி அவதிப்பட வைப்பது எந்த வகையில் நியாயம்' என்றனர்.
கட்டுமான நிறுவனம் தரப்பிலோ, 'இரண்டு மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்' என, தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்டுமான வல்லுநர்கள் கூறியதாவது:
கட்டுமான நிறுவனம் அடுத்தடுத்து பிளாக்குகளின் பணிகளை முடித்து, மொத்தமாக பணி நிறைவு சான்று பெற்றால் கூடுதல் செலவை குறைக்கலாம் என கணக்கு போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது சரியான நடைமுறை அல்ல. இந்த விஷயத்தில், சி.எம்.டி.ஏ., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.