/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் பிறந்த நாள் கொண்டாடியோர் கைது
/
சாலையில் பிறந்த நாள் கொண்டாடியோர் கைது
ADDED : மே 25, 2025 12:08 AM
பெரவள்ளூர், கொளத்துார், ஜி.கே.எம்., காலனி 12வது மற்றும் 13வது தெரு சந்திப்பில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில், பெரவள்ளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர்கள் சிலர், சாலை நடுவே 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாட தயாராகினர். அவர்களை அழைத்த போலீசார், 'பொது இடங்களில் கேக் வெட்டக்கூடாது' என எச்சரித்தனர்.
அதில் இருவர் கல்லுாரி மாணவர்கள் என்பதும், மது போதையில் இருந்ததும் தெரிந்தது. அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸ்காரரின் சட்டை பட்டனையும் அறுத்தனர். இதையடுத்து அநாகரிகமாக நடந்து கொண்ட திரு.வி.க.நகரை சேர்ந்த ராஜேஷ், 27, மற்றும் பெரவள்ளூரைச் சேர்ந்த பிரவீன், 25, ஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.