/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளி எடுக்க திரண்ட மக்கள்
/
தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளி எடுக்க திரண்ட மக்கள்
தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளி எடுக்க திரண்ட மக்கள்
தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளி எடுக்க திரண்ட மக்கள்
ADDED : ஜன 05, 2026 06:09 AM

தி.நகர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை நாளான நேற்று, புத்தாடைகள் வாங்க மக்கள் அதிகம் திரண்டு வந்ததால், தி.நகர் ரங்கநாதன் தெருவில் நெரிசல் அதிகரித்தது.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.
இதையொட்டி, தி.நகர் ரங்கநாதன் தெருவில், புத்தாடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, நேற்று மக்கள் அதிகம் திரண்டனர். இதனால், உஸ்மான் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
மேலும், ஜவுளி வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலை, சவுகார்பேட்டை பகுதிகளிலும் நேற்று, புத்தாடைகள் எடுக்க ஏராளமான மக்கள் திரண்டனர்.
நெரிசல் அதிகரிப்பால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.