/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கப்பாதை திட்டத்திற்கான நிலத்தை அளக்க மக்கள் எதிர்ப்பு
/
சுரங்கப்பாதை திட்டத்திற்கான நிலத்தை அளக்க மக்கள் எதிர்ப்பு
சுரங்கப்பாதை திட்டத்திற்கான நிலத்தை அளக்க மக்கள் எதிர்ப்பு
சுரங்கப்பாதை திட்டத்திற்கான நிலத்தை அளக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 20, 2025 03:08 AM

ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டையில் மேம்பால ரயில் நிலைய பணிகள் நடந்து வருகின்றன. அதன் அருகே, ஆதம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப் படுகிறது.
இதற்காக, கடந்த 2020ம் ஆண்டு அளக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட இடங்களில், சிலவற்றுல் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் துவக்கவுள்ளதால், மீண்டும் நிலத்தை அளந்து, கையகப்படுத்தும் பணி நேற்று துவக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, மக்களுடன் சமரச பேச்சு நடத்தப்பட்டது.
அப்போது, அவர்கள் தரப்பில், 'ஏற்கனவே சாலையிலிருந்து, நான்கு மீட்டர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது, அதனுடன் சேர்த்து மேலும் நான்கு மீட்டர் எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். இதற்கு, எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்' என்றனர்.
அதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறையினர், 'ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவே நாங்கள் அளக்கிறோம். கூடுதல் நிலம் எடுக்கப்படவில்லை' என்றனர். இதையடுத்து, நிலத்தை அளக்க மக்கள் சம்மதித்தனர்.