/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டவிரோத மது விற்பனை சைதையில் மக்கள் மறியல்
/
சட்டவிரோத மது விற்பனை சைதையில் மக்கள் மறியல்
ADDED : ஜன 28, 2025 12:17 AM

சைதாப்பேட்டை, நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.
இதில், சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை, பழைய ஜெயராஜ் திரையரங்கம் அருகே, கடை எண்: 645 டாஸ்மாக் பாரில், நேற்று முன்தினம் காலை முதல் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் குமரன் நகர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அ.தி.மு.க., சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலர் சுகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார், அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். மேலும், மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.

