/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்த வேண்டும்'
/
'மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்த வேண்டும்'
ADDED : ஜன 12, 2024 12:47 AM

வானகரம்,
அ.தி.மு.க., திருவள்ளுவர் மத்திய மாவட்டம் சார்பில், கழக அமைப்பு செயலரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில், கழக செயல் வீரர்கள் கூட்டம் வானகரத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில், பகுதி செயலர்கள் தாமோதரன், கந்தன், தேவதாஸ், இம்மானுவேல், அ.தி.மு.க., கவுன்சிலர் சத்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:
எம்.பி., தேர்தல், எம்.எல்.ஏ., தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
ஆட்சியில் இருப்பவர்களை விட்டு, ஆட்சியில் இல்லாத பழனிசாமி குறித்து மக்கள் பேசுகின்றனர். ஆளும் தி.மு.க., அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
சட்டசபை தேர்தலில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,விற்கு சவுக்கடி கொடுக்கும் தேர்தலாக, லோக்சபா தேர்தல் அமைய உள்ளது.
இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்பது நிச்சயம். இதற்கு தொண்டர்கள் களப்பணியே உறுதுணையாக இருக்கும்.
எனவே, தொகுதி மக்கள் பிரச்னைக்காக மாவட்டம் மற்றும் தலைமையிடம் அனுமதி பெற்று போராட்டங்கள் நடத்த வேண்டும்.
தெருமுனை கூட்டங்கள் நடத்தி, அதில் அப்பகுதி மக்கள் பிரச்னை குறித்தும் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

