/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேங்கரை உடைத்தபோது வாயு கசிவால் பீதி கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி
/
டேங்கரை உடைத்தபோது வாயு கசிவால் பீதி கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி
டேங்கரை உடைத்தபோது வாயு கசிவால் பீதி கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி
டேங்கரை உடைத்தபோது வாயு கசிவால் பீதி கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 25, 2025 11:46 PM

திருவொற்றியூர் : டேங்கரை உடைத்தபோது வாயு கசிவு ஏற்பட்டு, கண் எரிச்சல், மூச்சு திணறலால், திருவொற்றியூர் பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவில், ராமலிங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.
கிடங்கு ஒன்றில் நேற்று காலை, ஆசிட் ஏற்றிச் செல்லும் பழுதடைந்த டேங்கரை, இயந்திரம் உதவியுடன் உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், ஊழியர்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், கண் எரிச் சல், மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடம் விரைந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, வாயு கசிவை கட்டுப்படுத்தினர். வாயுக்கசிவு குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மாநகராட்சி வருவாய் துறையினர் முகாமிட்டு, கிடங்கு முறையான உரிமம் பெற்று செயல்படுகிறதா என, ஆய்வு மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்ட கிடங்கின் உரிமையாளர் யார் என்பது தெரியாததால், கிடங்கிற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் அர்ஜுனன் கூறுகையில், ''கிடங்கு உரிமையாளர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில், ஆய்வு செய்து திறக்க முடிவு செய்யப்படும்,'' என்றார்.