/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செல்ல பிராணிகள் பதிவு ஆர்வம் காட்டிய மக்கள்
/
செல்ல பிராணிகள் பதிவு ஆர்வம் காட்டிய மக்கள்
ADDED : நவ 24, 2025 03:06 AM

சென்னை: மாநகராட்சி சார்பில் நேற்று நடந்த சிறப்பு முகாமில், செல்லபிராணிகளை பதிவு செய்ய, பலரும் ஆர்வம் காட்டினர்.
சென்னை மாநகராட்சியில் செல்ல பிராணிகள் வளர்ப்போர் உரிமம் பெறுவது கட்டாயம். உரிமம் பெறாவிட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதற்காக, சென்னையில் 7 இடங்களில் உள்ள செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்களில், வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி, அக்., 8 முதல் இலவசமாக வழங்கப்படுகிறது .
வேலைக்கு செல்வோர் வசதிக்காக, மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த சிறப்பு முகாம்களில், 6,370 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
இது வரை பதிவு செய்யப்பட்டுள்ள, 77,707 செல்ல பிராணிகளில், 33,418 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்களில், தடுப்பூசி போட்டு, உரிமம் வழங்கும் பணி தொடரும். உரிமம் பெறுவதற்கான அவகா சம் டிச., 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

