/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை அமைக்கும் முன் கால்வாய் கட்ட அமைந்தகரையில் மக்கள் எதிர்பார்ப்பு
/
சாலை அமைக்கும் முன் கால்வாய் கட்ட அமைந்தகரையில் மக்கள் எதிர்பார்ப்பு
சாலை அமைக்கும் முன் கால்வாய் கட்ட அமைந்தகரையில் மக்கள் எதிர்பார்ப்பு
சாலை அமைக்கும் முன் கால்வாய் கட்ட அமைந்தகரையில் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 09, 2025 01:03 AM

அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருவில், புதிய சாலை அமைக்கும் முன், பழைய மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில் அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருக்கள் மற்றும் மஞ்சக்கொல்லை தெரு ஆகியவை உள்ளன.
இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது. பல்வேறு சேவை பணிகளுக்காக அதை தோண்டி எடுத்ததால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியான பின், சாலை அமைக்க 16.72 லட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதற்கிடையே 2023 அக்., மாதம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கின. பல இழுபறிக்குப் பின், இந்தாண்டு துவக்கத்தில், 90 சதவீத பணிகள் முடிந்தன. இதையடுத்து சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது.
இந்நிலையில், இப்பணிக்கு முன், இப்பகுதியின் மழைநீர் வடிகால்வாயை கட்ட வேண்டும் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் சாஜித் பாஷா கூறியதாவது:
பல ஆண்டு போராட்டத்திற்குப் பின், திருவீதி அம்மன் கோவில் தெருக்கள், மஞ்சக்கொல்லை தெரு குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், புதிய சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரித்தனர்.
மாநகராட்சி அதிகாரியின் அலட்சியப்போக்கால், பணிகள் முடங்கின. தற்போது, புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
இப்பகுதியில் உள்ள பழைய செங்கற்களான மழைநீர் வடிகால்வாயில் போதிய நீரோட்டம் இல்லாததால், வீடுகளில் மழைநீர் தேங்குகிறது.
புதிய சாலை அமைத்தால், சாலையை மீண்டும் பெயர்த்து வடிகால்வாய் கட்டுவர். அதற்கு பதில், இப்பகுதியில் கான்கிரீட்டில் புதிய மழைநீர் வடிகால்வாயை அமைத்து, பின் சாலையை அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக முதல்வர், மண்டல அலுவலர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, புதிய சாலை அமைப்பதற்கு முன், புதிதாக வடிகால்வாயை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.