மக்களின் பிரச்னைகள் ஒரு ஆண்டுக்குள் தீர்க்கப்படும்: த.வெ.க., பிரபாகர் வாக்குறுதி
மக்களின் பிரச்னைகள் ஒரு ஆண்டுக்குள் தீர்க்கப்படும்: த.வெ.க., பிரபாகர் வாக்குறுதி
ADDED : ஏப் 13, 2026 05:03 AM

சென்னை: ''ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும், ஆட்சி அமைத்த ஒரு ஆண்டிற்குள் தீர்வு காணப்படும்,'' என, த.வெ.க., வேட்பாளர் பிரபாகர், வாக்காளர்களிடம் வாக்குறுதி அளித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட, தி.நகர் கிரியப்பா சாலை, எஸ்.எஸ்.புரம், நக்கீரர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் த.வெ.க., வேட்பாளர் பிரபாகர், ஓட்டு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆயிரம்விளக்கு தொகுதி மக்களின் பிரச்னைகள் அனைத்தும், த.வெ.க., ஆட்சி அமைந்த ஒரு ஆண்டிற்குள் தீர்வு காணப்படும். தி.மு.க., - அ.தி.மு.க.,வை மக்கள் வெறுத்துவிட்டனர். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரப்போவது தலைவர் விஜய் தான் என, வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போல, தலைவர் விஜய், மக்களுக்கான ஆட்சியை வழங்குவார். தமிழகம் முழுதும் விஜய் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் த.வெ.க., வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
