/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூர் 'ஸ்பெக்ட்ரம் மால்' ஏலம் கடனுக்கான நிதியை திரட்ட உத்தரவு
/
பெரம்பூர் 'ஸ்பெக்ட்ரம் மால்' ஏலம் கடனுக்கான நிதியை திரட்ட உத்தரவு
பெரம்பூர் 'ஸ்பெக்ட்ரம் மால்' ஏலம் கடனுக்கான நிதியை திரட்ட உத்தரவு
பெரம்பூர் 'ஸ்பெக்ட்ரம் மால்' ஏலம் கடனுக்கான நிதியை திரட்ட உத்தரவு
ADDED : மார் 26, 2025 11:54 PM

சென்னை, சென்னையின் பல இடங்களில், பிரபல நிறுவனங்கள் சார்பில் மால்கள் கட்டப்படுகின்றன. தியேட்டர்கள், வணிக பகுதிகள், பொழுதுபோக்கு வசதிகள், உணவகங்கள் ஒரே இடத்தில் அமைவதால், இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வகையில், சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில், அப்பகுதியின் அடையாளமாக வீனஸ் தியேட்டர் இருந்தது. இதை இடித்து, 'கிரான்ட் வீனஸ் மால்' கட்டப்படும் என, 2011ல் அறிவிக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் முடியும் போது, 2012ல் இது 'ஸ்பெக்ட்ரம் மால்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கு, 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாலில், பி.வி.ஆர்., சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஐந்து திரைகள் உடைய திரையரங்கம், குத்தகை அடிப்படையில் நடத்தப்படுகின்றன. தவிர, பல்வேறு வகையான பிரபல வணிக நிறுவனங்களும், உணவகங்களும் இங்கு செயல்படுகின்றன.
இந்த வளாகத்தின் உரிமையில், 60 சதவீத பங்குகளை கங்கா பவுண்டேஷன் என்ற நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனம், தொழில் மேம்பாட்டுக்கான வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மத்திய அரசின் திவால் நிறுவனங்களுக்கான வாரியத்திடம், இது தொடர்பான வழக்கு சென்றது.
இந்த வாரியம் வாயிலாக, கங்கா பவுண்டேஷனின் சொத்துக்களை ஏலம் விட்டு கடனுக்கான நிதியை திரட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த அடிப்படையில் பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்ட சில சொத்துகள், ஏலத்திற்கு வந்துள்ளன. திவால் நிறுவனங்களுக்கான வாரியம் நியமித்த அலுவலர், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏலம் காரணமாக இந்த வளாகம், தொடர்ந்து இதே நிலையில் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.