/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்
/
திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்
திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்
திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு 1.7 ஏக்கரில் நிரந்தர கட்டடம்
ADDED : நவ 18, 2024 02:34 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை - தனியார் திருமண மண்டபத்தில், திருவொற்றியூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்படுகிறது. இடப்பற்றாக்குறை, கட்டடம் பழுது, அடிப்படை வசதியின்மையால், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதற்கு தீர்வாக, திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே, ரீட் கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நிலத்தில், நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட முடிவானது. இதற்கான, 1.7 ஏக்கர் நிலத்தை, சட்டத்துறையிடம் ஒப்படைக்க தேவையான ஆவண நகர்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில், நீதிமன்ற கட்டடப் பணிகளுக்காக தேர்வான இடத்தை, நேற்று மதியம், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., - சங்கர், நீதிபதிகள் பிரபா தாமஸ், சரவணகுமார், தாசில்தார் சகாயராணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணந்த நீதிமன்றம் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆய்வின்போது, அரசு வழக்கறிஞர்கள் ஜெய்சங்கர், பொன்னிவளவன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.