ADDED : ஜன 01, 2026 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பவள வண்ண பெருமாள் ஒய்யாரமாய் எழுந்தருளிய கருடசேவை நிகழ்வு நடந்தேறியது.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று முன்தினம், அதிகாலையில் 'சொர்க்கவாசல்' திறக்கப்பட்டது.
அப்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பவள வண்ண பெருமாளை, ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, 'கோவிந்தா கோவிந்தா' என்ற முழக்கத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு, உற்சவர் பவள வண்ண பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடவீதிகளில் வலம் வைபவம் நடந்தேறியது.
பெருமாளை வரவேற்கும் விதமாக, நான்கு மாடவீதிகளிலும் பெண்கள், அர்ச்சனை செய்தும், மலர்கள் துாவியும் சுவாமியை வழிப்பட்டனர்.

