ADDED : செப் 29, 2024 12:51 AM

சென்னை, ஹிந்து மகா டிரஸ்ட் - திருப்பதி திருக்குடை ஊர்வலக் கமிட்டியின் சார்பில், 13ம் ஆண்டு, திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பண யாத்திரை புறப்பாடு நிகழ்வு, நேற்று காலை நடந்தது.
பிரமாண்ட அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீகடல்மகள் சமேத, க் ஷீராப்திநாத பெருமாள் மற்றும் ராமானுஜம் உற்சவ சிலைகள், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
பின், எண்ணுார் - முகத்துவாரப் பகுதியில், நான்கு பைபர் படகு வழியாக, தாழங்குப்பம் வரை உற்சவர் சிலைகள், இரண்டு திருக்குடைகள், கடல் வழியே ஊர்வலமாகக் கொண்டு செல்லும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
நடுக்கடலில் பெருமாளுக்கு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின், கரைக்கு கொண்டு வரப்பட்டு, திருக்குடை யாத்திரை துவங்கியது.
இதுகுறித்து, ஹிந்து மகா டிரஸ்ட் நிர்வாகி வீரவசந்தகுமார் கூறுகையில், வது ''திருப்பாற்கடல் என 107வது திவ்ய தேசமாகக் கருதப்படும் வங்கக் கடலில், பெருமாள் எழுந்தருளியபடி திருமஞ்சனம் நடைபெற்றது. பத்து நாள் உற்வசத்திற்குப் பின், திருக்குடைகள் 7ம் தேதி திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.