/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பெருங்கொளத்துார் அணி வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பெருங்கொளத்துார் அணி வெற்றி
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பெருங்கொளத்துார் அணி வெற்றி
டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பெருங்கொளத்துார் அணி வெற்றி
ADDED : மார் 11, 2025 07:05 PM

சென்னை:டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், பெருங்கொளத்துார் சி.சி., அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில், திருவள்ளிக்கேணி சி.சி., அணியை தோற்கடித்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், நகரில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன. போட்டியில், பல்வேறு கிளப் மற்றும் அகாடமி அணிகள் பங்கேற்றுள்ன.
* மூன்றாவது டிவிசன் 'பி' பிரிவு: பெருங்கொளத்துார் சி.சி., அணி, 50 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 261 ரன்களை எடுத்தது. அணியின் வீரர் விஜய், 127 பந்துகளில், ஒரு சிக்சர், ஒன்பது பவுண்டரியுடன், 112 ரன்களை எடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, திருவல்லிக்கேணி சி.சி., அணி, 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 239 ரன்களை எடுத்தது. இதனால், 22 ரன்கள் வித்தியாசத்தில் பெருங்கொளத்துார் சி.சி., வெற்றி பெற்றது.
* நான்காவது டிவிசன் 'பி' பிரிவு: தமிழக மின்வாரிய அணி, 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 109 ரன்களை எடுத்தது. எதிர் அணி வீரர் பழனிசாமி ஏழு விக்கெட் எடுத்து, 30 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, பாரதி சி.சி., 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 93 ரன்களில் ஆட்டமிழந்து, தோல்வியடைந்தது. மின்வாரிய வீரர் தினேஷ், ஐந்து விக்கெட் எடுத்து, 29 ரன்களை கொடுத்தார்.
* ஐந்தாவது டிவிசன் 'ஏ' பிரிவு: ஏர் இந்தியா அணி, 41.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 128 ரன்களை எடுத்தது. எதிர் அணியின் வீரர் கவுதம், 6 விக்கெட் எடுத்து, 24 ரன்களை கொடுத்தார். அடுத்து களமிறங்கிய, பிரண்ட்ஸ் லெவன், 18.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 129 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்கின்றன.
***