ADDED : மே 21, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
கோயம்பேடு: கோயம் பேடு காய்கறி சந்தையில் நிலவும் வாகன நிறுத்த குறைபாடு, கழிப்பறை, குடிநீர் வசதிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், கோயம்பேடு அங்காடி தலைமை நிர்வாக அதிகாரியிடம், நேற்று மனு அளிக்கப்பட்டது.
பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறுகையில், ''புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள விஜய், வணிகர்களின் வாழ்வாதார மையமாக இருக்கும் கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''” என்றார்.
