/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பு கோவிலம்பாக்கம் மக்கள் தவிப்பு
/
நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பு கோவிலம்பாக்கம் மக்கள் தவிப்பு
நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பு கோவிலம்பாக்கம் மக்கள் தவிப்பு
நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பு கோவிலம்பாக்கம் மக்கள் தவிப்பு
ADDED : ஜன 27, 2026 05:36 AM

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீரில் பெட்ரோல் கலந்துள்ளதால், பகுதிமக்கள் சொந்த வீட்டை காலி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு சந்திப்பில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளின், கீழ்நிலை எரிபொருள் சேகரிப்பு தொட்டி கடந்தாண்டு சேதமடைந்தது.
இதன் காரணமாக, நிலத்தடி நீரில் 'பெட்ரோல்' கலந்துவிட்டது. இதனால், அப்பகுதியில் வசிப்போர், குடிக்கும் நீரில் பெட்ரோல் வாடை அடிப்பதால் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, திருவின் நகர் குடியிருப்பு நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பெட்ரோல் பங்குகள் பின்புறம், 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 250க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த ஓராண்டாக, பெட்ரோல் கலந்த நிலத்தடி நீரை பயன்படுத்துவதால், பலரும் தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலர் தங்கள் சொந்த வீட்டை காலி செய்து, வேறு இடங்களில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில், நிலத்தடி நீரில், 'பெட்ரோல்' கலந்திருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு துறைகள் ஒன்றிணைந்து, பங்குகளில் ஆய்வு செய்து, நிலத்தடி நீரில் கலந்துள்ள'பெட்ரோலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

