ADDED : மே 29, 2026 02:12 AM

அ நிறம் | அளவு
திருவான்மியூர்: குப்பை தொட்டியில் கிடந்த மொபைல் போனை, துாய்மை பணியாளர் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார்.
செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. அடையாறு மண்டலம், 179வது வார்டில், துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். நேற்று, திருவான்மியூர், கங்கையம்மன் கோவில் தெரு வில், வீடு வீடாக குப்பை சேகரித்து விட்டு, அதை பிரித்து கொண்டிருந்தார்.
அதில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்தார். இந்த நிலையில் , மல்லிகா என்பவர் மொபைல் போனில் அழைத்து, தன் மொபைல் போன் என கூறியுள்ளார்.
அடையாளங்களை கேட்டு உறுதி செய்தபின், அதிகாரிகள் முன்னிலையில், சுரேஷ் மொபைல் போனை மல்லிகாவிடம் ஒப்படைத்தார்.
