ADDED : அக் 27, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோடம்பாக்கம், வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத், 45; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று காலை கோடம்பாக்கத்தில் இருந்து சவாரி ஏற்றி, திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இறக்கிவிட்டார்.
பின், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.