ADDED : டிச 07, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 54வது பிளாக்கைச் சேர்ந்தவர் விஷ்ணு, 19. இவர், மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் சர்ச் அருகே உள்ள டீக்கடையில், நேற்று டீ குடித்துக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.