சி.எஸ்.கே.,யுடன் இணையும் 'போன்ப்ளாக்' ஏ.ஐ., நிறுவனம்
சி.எஸ்.கே.,யுடன் இணையும் 'போன்ப்ளாக்' ஏ.ஐ., நிறுவனம்
ADDED : பிப் 11, 2026 06:28 AM

சென்னை: நடப்பாண்டிற்கான ஐ.பி.எல்., தொடரில், சி.எஸ்.கே., அணியின் அதிகாரப்பூர்வ ஏ.ஐ., பார்ட்னராக, 'போன்ப்ளாக்' நிறுவனம் களம் இறங்க உள்ளது.
ஐ.பி.எல்., அரங்கின் நடப்பு சீசனில், சி.எஸ்.கே., எனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்காக, முன்னணி நிறுவனமான 'போன்ப்ளாக்' ஏ.ஐ., டெக்னாலஜி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில் உள்ள 'ஹயாத் ரீஜென்சி' ஹோட்டலில் நடந்தது.
இந்த நிகழ்வில், சி.எஸ்.கே., அணியின் சி.இ.ஓ., விஸ்வநாதன் மற்றும் போன்ப்ளாக் நிறுவன இணை நிறுவனர் துரை அப்பாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, 'போன்ப்ளாக்' நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட, சி.எஸ்.கே., அணியின் புதிய 'ஜெர்ஸி' அறிமுகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் துரை அப்பாதுரை கூறுகையில், ''சி.எஸ்.கே., ஒரு உற்சாகமான பிராண்ட். அவர்களுடன் இணைவது பெருமை அளிக்கிறது.
தொழில்நுட்பச் சந்தையில் எங்களை முன்னிலைப்படுத்த, இந்த கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும். இந்த கூட்டணியின் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க முடியும். மேலும், ஏ.ஐ., தொழில்நுட்ப பார்ட்னராக எங்களை தேர்வு செய்தது மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.
சி.எஸ்.கே., அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், ''போன்ப்ளாக் நிறுவனத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவர்களின் ஏ.ஐ., திறன்கள் மூலம் ரசிகர்களுக்கு புதிய டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்கித் தருவோம். கிரிக்கெட் வரலாற்றில் சி.எஸ்.கே., அணியின் புதிய துவக்கமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
