தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/புகைப்பட கலைஞர் துாக்கிட்டு தற்கொலை

புகைப்பட கலைஞர் துாக்கிட்டு தற்கொலை

புகைப்பட கலைஞர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 05, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர்., நகர்,சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் கபிலர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 32. இவர், தனியார் ஸ்டூடியோவில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்தார்.

இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சுரேஷ் மது போதையில் வந்ததால், தம்பதி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, சுரேஷ் கோபத்தில் வீட்டில் உள்ள அறைக்குள் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால், அருகில் வசிப்போர் உதவியுடன், அவரது மனைவி கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, சுரேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், சுரேஷின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us