தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உடற்கல்வியியல் கல்லுாரி போட்டிகள் ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று துவக்கம்

உடற்கல்வியியல் கல்லுாரி போட்டிகள் ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று துவக்கம்

உடற்கல்வியியல் கல்லுாரி போட்டிகள் ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று துவக்கம்


ADDED : அக் 23, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, உடற்கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியில், இன்று துவங்குகின்றன.

சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியின் உடற்கல்வியியல் துறை சார்பில், உடற்கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், இன்று துவங்குகின்றன.

போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில், இன்று காலை 8:00 மணிக்கு துவங்கி, தொடர்ந்து நாளை மறுநாள் வரை நடக்கின்றன.

இதில், இருபாலருக்கான கால்பந்து, குத்துச்சண்டை, வில்வித்தை, நீச்சல், கூடைப்பந்து மற்றும் கார்க் பால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.

போட்டியில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு உட்பட்ட நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., - கோவை மாருதி, திருச்செந்துார் சிவந்தி ஆதித்தனார், சேலம் சாரதா கல்லுாரி, செல்வம் கல்லுாரி, கோவிலுார் ஆண்டவர், திருச்சி மீனாட்சி ஆகிய 19 உடற்கல்வியியல் கல்லுாரிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us