
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு, நியமனத் தேர்வில் இருந்து முழுமையாக விலக்களித்து, உடனடியாக பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத்திறனாளிகள், சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றனர். போராட்டத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து, வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.