ADDED : செப் 13, 2026 06:02 PM
சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 17, 18ம் தேதிகளில், ஊறுகாய், தொக்கு, மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கிண்டி, சிப்பெட் எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 17ம் தேதி, தக்காளி ஊறுகாய், கொத்தமல்லி தொக்கு, இஞ்சி தொக்கு, கோங்குரா ஊறுகாய், முருங்கைக்காய் ஊறுகாய், புளி, இஞ்சி ஊறுகாய், புளியோதரை, வத்தக்குழம்பு பேஸ்ட் உள்ளிட்டவை தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
வரும் 18ம் தேதி, பஞ்ச காவ்யா சோப்னா ரோஸ் மற்றும் சந்தன ஆயில், வாழைப்பழம் மிக்ஸிங் சோப், நலங்கு மாவு சோப், குப்பைமேனி சோப், பால் சோப், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் சோப் வகைகள், பாதாம், குங்குமப்பூ, ரோஸ் ஆயில் உள்ளிட்ட வகைகளில் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 044 – 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
