/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருச்சி விமானத்தில் கோளாறு 'ரன்வே'யில் நிறுத்திய விமானி
/
திருச்சி விமானத்தில் கோளாறு 'ரன்வே'யில் நிறுத்திய விமானி
திருச்சி விமானத்தில் கோளாறு 'ரன்வே'யில் நிறுத்திய விமானி
திருச்சி விமானத்தில் கோளாறு 'ரன்வே'யில் நிறுத்திய விமானி
ADDED : அக் 24, 2025 01:44 AM
சென்னை: சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் 'இண்டிகோ' விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதையடுத்து, சுதாரித்த விமானி ஓடுபாதையிலே பத்திரமாக நிறுத்தினார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் 'இண்டிகோ' விமானம், நேற்று அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டது. இதில் 77 பேர் இருந்தனர்.
விமானம் 'ரன்வே' எனும் ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதை கண்டறிந்த விமானி, சுதாரித்து, அவசரமாகவும் அதேநேரம் பாதுகாப்பாகவும் ரன்வேயில் நிறுத்தினார். கோளாறு குறித்து உடனடியாக, சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக இழுவை வாகனம் வரவழைக்கப்பட்டு, விமானம் பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக நிறுத்தப் பட்டது.
விமானத்துக்குள் ஏறி இயந்திரக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் பொறியாளர்கள் குழுவினர் இறங்கினர். பயணியர் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, ஓய்வறை பகுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
பயணியர் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

