ADDED : நவ 12, 2024 12:30 AM
அம்பத்துார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் சந்திர சாஹூ, 43. இவர், அத்திப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் பராமரிப்பு பிரிவு பொறுப்பாளராக உள்ளார்.
குடியிருப்பின் 7வது பிளாக்கில், நேற்று முன்தினம் இரவு, மூன்று பேர், பாஸ்கரை கண்டதும் தப்ப முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட இருவர் தப்பினர். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்தனர்.
இதில், ஆவடி, கோவில் பதாகையைச் சேர்ந்த சண்முகம், 20, என்பது தெரிய வந்தது. இவர், கூட்டாளிகளான அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 19, பட்டாபிராமைச் சேர்ந்த கவுதம், 19, ஆகியோருடன் சேர்ந்து, பூட்டிய வீடுகளின் தண்ணீர் குழாய்களில் உள்ள 50 'டேப்' களை திருடியது தெரிந்தது. அதன் மதிப்பு 20,000 ரூபாய்.
ஸ்ரீதர், கவுதம் ஆகியோரையும் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
