/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.8.16 கோடியில் குழாய் பதிப்பு
/
குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.8.16 கோடியில் குழாய் பதிப்பு
குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.8.16 கோடியில் குழாய் பதிப்பு
குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.8.16 கோடியில் குழாய் பதிப்பு
ADDED : பிப் 07, 2024 12:49 AM
சென்னை, செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மொத்தம், 1.03 கோடி லிட்டர் கொள்ளளவு உடைய 24 கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், தினமும் 60 லட்சம் லிட்டர் குடிநீர் சேமித்து, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், 80 லட்சம் லிட்டர் குடிநீர் இருந்தால் தான், தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்க முடியும். கூடுதலாக, 3,300 வீடுகள் கட்டப்படுகின்றன. மொத்த வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய, கீழ்நிலை தொட்டியும், குழாயும் மேம்படுத்த வேண்டி இருந்தது.
இதனால், கூடுதலாக 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய இரண்டு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, 5.50 கோடி ரூபாயில் கட்ட, வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கு, தனி குழாய் அமைத்து குடிநீர் கொண்டுவர, ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் இருந்து கீழ்நிலை தொட்டி வரை, 3.5 கி.மீ., துாரத்தில், 400 எம்.எம்., குழாய் பதிக்க, 8.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி, நேற்று துவங்கியது.
சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பணியை துவக்கி வைத்தார். இந்த குழாய் பதிக்கும் பணியை, குடிநீர் வாரியம் செய்கிறது.
மொத்தமுள்ள, 3.5 கி.மீ., துாரத்தில், 2 கி.மீ., துாரம் மாநகராட்சி சாலையிலும், 800 மீட்டர் துாரம் நெடுஞ்சாலைத் துறை சாலையிலும் மற்றும் 100 மீட்டர் துாரம் ஓ.எம்.ஆரிலும், மீதமுள்ள 600 மீட்டர் துாரத்தில், வாரியம் பராமரிப்பில் உள்ள சாலையிலும், குழாய் பதிக்க வேண்டி உள்ளது.
பள்ளம் தோண்டிய பின், அந்தந்த துறைகள் வாயிலாக சாலை சீரமைக்கப்பட உள்ளது. மொத்த பணிகளை, நான்கு மாதங்களில் முடிக்க, வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

