/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 தானியங்கி மழைமானிகள் மழைக்காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

ADDED : பிப் 21, 2024 01:20 AM

செங்கல்பட்டு:மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்காக தமிழகம் முழுதும் 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம், பணிகள் நடந்துவருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வளாகம் மற்றும் அரசுக்கு சொந்தமான திறந்தவெளி பகுதியில், தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைப்பதற்கான இடத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வு செய்து, பேரிடர் மேலாண்மை துறையிடம் ஒப்படைத்தனர்.
தேர்வு செய்யப்பட்ட இடங்களில், முதல் கட்டமாக தானியங்கி மழைமானிகளை பொருத்தி, கம்பி வேலி அமைக்கப்படுகிறது.
இவற்றின் வாயிலாக மழையின் அளவு துல்லியமாக கணக்கீடு செய்யப்படும்.
இதனுடனான தகவல் தொடர்பு, பேரிடர் மீட்டு துறை அலுவலகத்தில் இணைக்கப்படும். இங்கிருந்து, மாவட்டத்தின் மழை அளவு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
திருப்போரூர் தாலுகாவில் கேளம்பாக்கத்திலும், செய்யூர் தாலுகாவில் லத்துாரிலும், தலா ஒரு தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்படுகின்றன. அவற்றின் மூலம், வெப்பநிலை, நிலநடுக்கம் உள்ளிட்டவை குறித்து, பேரிடர் அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இப்பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து, மழைக்காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்தார்.