தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/1,000 ‘ஏசி’ பேருந்துகள் இயக்க விரைவில் டெண்டர் விட திட்டம்

1,000 ‘ஏசி’ பேருந்துகள் இயக்க விரைவில் டெண்டர் விட திட்டம்

1,000 ‘ஏசி’ பேருந்துகள் இயக்க விரைவில் டெண்டர் விட திட்டம்


UPDATED : நவ 25, 2026 08:42 PM

ADDED : நவ 25, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:42 PM ADDED : நவ 25, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மற்றும் புறநகரில், 1,000 புதிய ‘ஏசி’ பேருந்துகள் இயக்கத்திற்கான, ‘டெண்டர்’ ரத்து செய்யப்பட்ட நிலையில், விரைவில் புதிய டெண்டர் வெளியிடப்பட உள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் அதிகரித்து வரும் பயணியர் போக்குவரத்து தேவையைச் சமாளிக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம், பேருந்து சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பங்களிப்புடன், ஜி.சி.சி., எனப்படும் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில், 1,000 புதிய ‘ஏசி’ மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த மார்ச் மாதத்தில் டெண்டர் வெளியிடப்பட்டது.

இந்த டெண்டரை, கடந்த அக்., 14ம் தேதி, நிர்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டு, மாநகர போக்குவரத்து கழகம் ரத்து செய்தது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த தி.மு.க., ஆட்சியில் நிர்வாக ஒப்புதலை பெறாமலேயே, டெண்டர் வெளியிட்டதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது, 1,000 புதிய ‘ஏசி’ பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்புதலை, கடந்த 9ம் தேதி தமிழக அரசு வழங்கி உள்ளது. இதற்கான உத்தரவையும் முதல்வர் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், 500 கோடி ரூபாயில், 1,000 ‘ஏசி’ பேருந்துகளை இயக்க, புதிய டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்த பின், புதிய ‘ஏசி’ பேருந்துகள் இயக்குவதற்கான வழிக்காட்டுதல் முறைகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us