/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர் இருப்பு குறைவதால் ஆந்திராவிடம் பேச திட்டம்
/
நீர் இருப்பு குறைவதால் ஆந்திராவிடம் பேச திட்டம்
ADDED : பிப் 17, 2024 12:17 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள், கடலுார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி., ஆகும். தற்போது, ஐந்து ஏரிகளிலும் சேர்த்து 9.60 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
கடந்தாண்டு இதேநாளில், 11.5 டி.எம்.சி., நீர் இருந்தது. கடந்தாண்டை விட தற்போது, நீர் இருப்பு 1.90 டி.எம்.சி., குறைவாக உள்ளது.
இந்த நீரை வைத்து, சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலைகளின் குடிநீர் தேவை உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும். இதில், நடப்பு நீர் வழங்கும் காலத்தில், 2.41 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.
சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு 2 டி.எம்.சி., நீரை பெறுவதற்கான பேச்சில், ஆந்திர அதிகாரிகளிடம், நீர்வளத்துறையினர் துவங்கியுள்ளனர். இது தொடர்பாக ஆந்திரா செல்லவும், நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.