/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் திடீர் கோளாறு ஓடுபாதையில் நிறுத்தம்
/
விமானத்தில் திடீர் கோளாறு ஓடுபாதையில் நிறுத்தம்
ADDED : டிச 22, 2024 12:13 AM
சென்னை, டிச. 22-
அந்தமான் செல்லும் விமானம், நேற்று காலை 10:30 மணிக்கு, சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தயார் நிலையில் இருந்தது. 145 பயணியர் விமானத்தில் இருந்தனர்.
ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை, விமானிக்கு தெரியவந்தது.
இதையடுத்து விமானி, விமானத்தை அங்கேயே நிறுத்தி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தந்தார்.
விமான பொறியாளர்கள் குழு, இழுவை வண்டியில் விமானத்தை இழுத்து சென்று பாதுகாப்பாக நிறுத்தினர். பயணியர் பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலைய 'லாஞ்ச்' பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்தவுடன், அந்த விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கம்
சவுதி அரேபியாவின் தமாம் நகரில் இருந்து ஹைதராபாத்துக்கு 175 பேருடன் நேற்று காலை, 'இண்டிகோ' விமானம் புறப்பட்டது. காலை 8:00 மணிக்கு ஹைதராபாத் வான்வெளியை நெருங்கியபோது, அங்கு மோசமான வானிலை நிலவியது.
தரையிறங்க அனுமதி கிடைக்காததால், சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. காலை 9:00 மணிக்கு பத்திரமாக சென்னையில் விமானம் தரையிறங்கியது.
பின், ஹைதராபாத்துக்கு அந்த விமானம் அனுப்பப்பட்டது.