ADDED : நவ 16, 2025 02:45 AM
சென்னை: தாவர நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை, எட்டாம் வகுப்பு படித்தோருக்கு, தோட்டக்கலைத் துறை இலவசமாக வழங்கவுள்ளது.
மாடி தோட்டம், வீட்டு தோட்டம், விவசாய நிலங்களில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்டவற்றின் நாற்றுக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தால், நல்ல வருவாய் கிடைக்கும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், தோட்டக்கலை நாற்றுக்கள் தேவை அதிகரித்து வருகிறது.
எனவே, 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு, தாவர நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை, தோட்டக்கலைத் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து, 'வெற்றி நிச்சயம்' என்ற திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளன.
மாத வரம், அருள் நகரில் உள்ள தோட்டக்கலை மே லாண்மை நிலையத்தில் வரும், 26 முதல் டிச., 29 வரை, 26 நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், 18 முதல் 35 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். உண வு, தங்குமிடம் இலவசம். பயிற்சி முடித்ததும், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 84897 42975, 95000 12309, 99442 09417 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

