/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் தீ விபத்து 'பிளாஸ்டிக்' குழாய்கள் நாசம்
/
ஆவடியில் தீ விபத்து 'பிளாஸ்டிக்' குழாய்கள் நாசம்
ADDED : பிப் 18, 2024 12:15 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் - சென்னீர்குப்பம்- ஆவடி சாலையில், தனியாருக்கு சொந்தமான வீட்டு மனைகள் உள்ளன.
நேற்று முன்தினம், அங்கு மண்டிக் கிடந்த புதர்களை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அவற்றை, நேற்று காலை ஓரிடத்தில் குவித்து ஊழியர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
கொழுந்து விட்டெரிந்த தீ, மற்றொரு காலி இடத்தில் கட்டட பணிக்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த 300க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய் மீது பரவியது.
பூந்தமல்லி மற்றும் ஆவடி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் புற்கள் எரிக்கப்பட்டதே, தீ விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.