/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு கோடி ரூபாயில் விளையாட்டு மைதானம்
/
ஒரு கோடி ரூபாயில் விளையாட்டு மைதானம்
ADDED : டிச 11, 2024 12:23 AM
முகலிவாக்கம், முகலிவாக்கம், பொன்னி தெரு, ஈ.வி.பி., ராஜேஸ்வரி அவென்யூவில் மாநகராட்சி இடம் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக, அங்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2,756 சதுர மீட்டரில் விளையாட்டு மைதானம், ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் உள்விளையாட்டு இறகுப்பந்து கூடம், கூடைப்பந்து மைதானம், திறந்தவெளி விளையாட்டு திடல், நடைபாதை பயிற்சி அமைப்பு, குடிநீர், மின்விளக்கு, ஒப்பனை அறை, இருக்கைகள், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
அந்த விளையாட்டு அரங்கத்தை, நேற்று முன்தினம் மாலை துணை முதல்வர் உதயநிதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதன் வாயிலாக, 4,000 பேர் பயனடைவர் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

