ADDED : டிச 25, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1,000 நாட்கள் கடந்தும், தி.மு.க.,அரசு நிறைவேற்றவில்லை என கூறி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.,வினர், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை பெய்த நிலையில், குடை பிடித்தவாறு நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

