/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் அத்துமீறிய கடைக்காரருக்கு 'போக்சோ'
/
சிறுமியிடம் அத்துமீறிய கடைக்காரருக்கு 'போக்சோ'
ADDED : செப் 30, 2025 02:15 AM
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடியில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது போலீசார் செய்தனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தாய் இறந்து விட்டதால், தாய்மாமா வீட்டில் வளர்ந்து வருகிறார். நேற்று சிறுமி வீட்டருகே உள்ள மளிகை கடையில் ஜூஸ் வாங்க சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் இளங்கோ, 48, என்பவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி, தன் தாய்மாமா முருகனிடம் தெரிவித்துள்ளார். அவர், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, பெரம்பூர், திரு.வி.க., சாலையை சேர்ந்த இளங்கோவை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.