ADDED : மார் 13, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், சென்னை அம்பத்துார் அடுத்த புதுார் பானு நகரைச் சேர்ந்தவர் முருகன், 26; பெயின்டர். அவர், அம்பத்துார் சோழபுரத்தில் வசிக்கும், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய், அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், நேற்று 'போக்சோ'வில் முருகனை கைது செய்தனர்.

